உலகில் மிகத் தூய்மைக்கேடான நகரங்களின் பட்டியலில் புதுடில்லி அடிக்கடி இடம்பெறுவதுண்டு.
இந்நிலையில், புதுடில்லியில் காற்று மாசு மீண்டும் அதிகரித்துள்ளது.
இதனால், புதுடில்லி மக்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்கும்படி ஊக்குவிக்கப்படுவதாக The Hindustan Times தெரிவித்துள்ளது.
புதுடில்லியின் புதுடில்லியின் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal)அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கும்படி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேவைப்பட்டால் பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துமாறு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
போக்குவரத்து மூலம் ஏற்படும் காற்றுத் தூய்மைக்கேட்டைக் குறைக்க அது உதவலாம் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நகரம் முழுவதும் இருக்கும் பாடசாலைகளும் வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டன.
புதுடில்லிக்கு அருகில் உள்ள மாநிலங்களில் அறுவடைக்குப் பிந்திய பயிர்முளைகள் தீயிட்டு அழிக்கப்படுவதால் கடும் புகை உருவாகிறது.