ஹைதராபாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 2 சிறுமிகளும் 4 பெண்களும் அடங்குவதாகவும் பலர் மூச்சு திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட கட்டடத்தில் இருந்து மொத்தம் 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.