இங்கிலாந்து பிரதமர் சுனக்கிற்குப் பதிலாக ஓர் உண்மையான கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் வர வேண்டும் என ஆண்ட்ரியா ஜென்கின்ஸ் எம்.பி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் ரிஷி சுனக்கிற்கு எதிராக முதன்முறையாக நம்பிக்கையில்லாக் கடிதத்தையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.
இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுய்லா ப்ரூவர்மனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய பின்னர் பிரதமர் ரிஷி சுனக் தனது அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார்.
இந்நிலையிலேயே, ஆண்ட்ரியா ஜென்கின்ஸ் எம்பி, பிரதமர் ரிஷி சுனக் மீது நம்பிக்கையில்லா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
அமைச்சரவை மறுசீரமைப்பில் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மேனை பதவி நீக்கம் செய்த பின்னர் பிரதமர் ரிஷி சுனக் தனது முதல் நம்பிக்கையில்லா கடிதத்தை எதிர்நோக்கியுள்ளார்.
ரிஷி சுனக் மீது பல புகார்களை முன்வைத்துள்ள ஆண்ட்ரியா ஜென்கின்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்ஸிட் தீர்மானம் நாடாளுமன்றத்தில் முடங்கி நின்ற போது துணிச்சலாகப் போராடியவர் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் என்றும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரை, ரிஷி சுனக் தான் நீக்கியதாகவும் சாட்டினார்.
மேலும், உண்மையைப் பேசியதற்காகவே உள்துறை அமைச்சராக இருந்த சுயல்லா பிரேவர்மேன் பதவிநீக்கம் செய்யப்பட்டதாகவும் ரிஷி சுனக் இடதுசாரியாக மாறுவதாகவும் அவர் சாடியுள்ளார்.