உலகின் மிக அதிகமாக மாசுபட்ட முதல் 10 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் புதுடெல்லியுடன் தற்போது கொல்கத்தாவும் மும்பையும் இணைக்கப்பட்டுள்ளன.
கடந்த தீபாவளியன்று பட்டாசு மிக அதிகளவில் வெடிக்கப்பட்டதால் அந்நகரங்களில் புகைமூட்டம் மோசமானது.
Swiss group IQAir என்ற இந்தப் பட்டியலின் முதல் இடத்தில் புதுடெல்லி உள்ளது.
அங்குக் காற்றின் தரம் மிகவும் மோசமாகவுள்ளது.
ஆரோக்கியமானவர்களையும் பாதிக்கக்கூடியது. ஏற்கெனவே நோயுள்ளோருக்கு இன்னும் ஆபத்து விளைவிக்கக்கூடியது.
தொடர்புடைய செய்தி : புதுடில்லி மக்கள் வீட்டிலேயே இருக்கும்படி ஆலோசனை!
அத்துடன், 4ஆவது இடத்தில் கொல்கத்தாவும் 8ஆவது இடத்தில் மும்பையும் இடம்பெற்றுள்ளன.
இந்த இரு நகரங்களிலும் காற்றின் தரம் ஆஸ்துமா, நுரையீரல் மற்றும் இதயப் பிரச்சினை உள்ளோரைப் பாதிக்கும் அளவில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் புதுடெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு அதிகாரிகள் தடை விதிப்பதுண்டு. ஆனால், அந்தத் தடையை செயற்படுத்துவது அரிதாகும்.