காஸாவிற்கு வருமாறு உலக பணக்காரர் எலான் மஸ்க்கிற்கு (Elon Musk) ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
காஸா மக்களுக்கு எதிராக எந்தளவு அழிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதைக் காண மஸ்க்கிற்கு தான் அழைப்பு விடுப்பதாக ஹமாஸ் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்டான் (Osama Hamdan) பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கிய இடத்திற்கு நேற்று முன்தினம் (27 ) எலான் மஸ்க் சென்று பார்வையிட்டார்.
வெறுப்புணர்வு பரவுவதைத் தடுக்கத் தேவையான அனைத்தையும் அங்கு செய்யப்போவதாக எலான் அங்கு தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி : இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் நிறுத்த உடன்பாடு மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு!
ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் காஸா மீது தாக்குதல் நடத்தியது.
இருதரப்புக்கும் இடையிலான சண்டைநிறுத்தம் மேலும் இரு நாள்களுக்கு நேற்று (28 ) நீட்டிக்கப்பட்டது.