கம்போடியாவில் உள்ள தொல்பொருள் தளங்களில் ஒன்றான அங்கோர் வாட் (Angkor Wat) கோவில், உலகின் 8ஆவது அதிசயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாக அங்கோர் வாட் கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளது.
12ஆம் நூற்றாண்டில் இரண்டாம் சூரியவர்மன் என்னும் மன்னரால் சூரிய பகவானுக்காகக் கட்டப்பட்டிருக்கும் பிரமாண்டமான கற்கோவில் இது என்றும் இந்து – பௌத்த மதமாற்றத்தின் அடையாளமாக இது காலப்போக்கில் ஒரு பெரிய புத்த கோவிலாக உருவானதாகவும் வரலாறு கூறுகிறது.
அங்கோர் என்றால் எட்டுக் கைகளையுடைய விஷ்ணுவைக் குறிக்கும். இக்கோவில் சுவர்களிலும் சிற்பங்களிலும் இதனைக் காணமுடிகிறது.
உலகின் எட்டாவது அதிசயம் என்பது புதிய கட்டிடங்கள் அல்லது திட்டங்கள் அல்லது வடிவமைப்புகளுக்கு வழங்கப்படும் அதிகாரபூர்வமற்ற அங்கிகாரம் ஆகும். இத்தாலியின் பாம்பீயிடம் இருந்து அந்த இடத்தை அங்கோர் வாட் தற்போது தட்டப் பறித்துள்ளது.
அங்கோர் வாட் கோவில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.