இந்தியாவின் சென்னை விமான நிலையம் மீண்டும் வழக்கம்போல் இயங்கத் தொடங்கியுள்ளது.
விமானங்கள் தரையிறங்கவும் அங்கிருந்து புறப்படவும் இப்போது அனுமதிக்கப்படுவதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்தது.
மிக்ஜம் சூறாவளியால் விமானப் போக்குவரத்து தற்காலிகமாய் நிறுத்திவைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கனத்த மழையால் குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர்.
தொடர்புடைய செய்தி : மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் கரையோர மாவட்டங்கள் பாதிப்பு
வீதிகளில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியிருக்கிறது.
பல விமானச் சேவைகள் சென்னையில் இருந்து பெங்களூருக்கு மாற்றிவிடப்பட்டன.
மிக்ஜம் சூறாவளி இந்திய நேரப்படி இன்று (06) நண்பகல் 12 மணிக்கு ஆந்திரப் பிரதேசத்தைக் கடக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
மணிக்குக் கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் வேகத்துக்குக் கடுங்காற்றையும் அது கொண்டுவரும் எனக் கூறப்படுகிறது.