அமெரிக்கச் சுற்றுலா பயணி ஒருவர் பஹாமஸில் சுறாவால் தாக்கப்பட்டு மரணமடைந்தார்.
அவர் போஸ்ட்டன் நகரைச் சேர்ந்த 44 வயதுப் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
நியூ புரோவிடன்ஸ் என்னும் தீவுக்கு அப்பால் paddle-boarding எனப்படும் பலகை மிதவையில் அப்பெண் சவாரி செய்துகொண்டிருந்தபோது சுறா தாக்கியுள்ளது.
உயிர்க்காப்பாளர் ஒருவர், அந்தப் பெண்ணையும் அவருடன் இருந்த ஓர் ஆணையும் கரைக்குக் கொண்டுவந்து முதலுதவி அளித்தார்.
எனினும், பெண்ணின் உடலின் வலது பக்கத்தில் கடுமையான காயம் இருந்தது.
இதனையடுத்து அவர் உயிரிழந்ததாக அவசர மருத்துவ உதவியாளர்கள் அறிவித்தனர்.
பஹாமஸில் 3,000க்கும் அதிகமான தீவுகள் உள்ளன. சுறாத் தாக்குதல்கள் அங்கு அரிது.
1580ஆம் ஆண்டு முதல் அங்கு சுறா தாக்கியச் சம்பவங்கள் 33ஆகப் பதிவாகியுள்ளன.