சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கன்சு மாநிலத்தில் இன்று (19) நேர்ந்த நிலநடுக்கத்தில் 100க்கும் அதிகமானோர் மரணித்துள்ளனர்.
மேலும் பலர் காயமுற்றனர்.
ரிக்டர் 5.9 அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத பயங்கர நிலநடுக்கமான இது பதிவாகியுள்ளது.
வீடுகள் இடிந்து விழுந்தன. சில கிராமங்களில் மின்சாரமும் தண்ணீர் விநியோகமும் தடைப்பட்டன.
சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகளில் இடிந்து விழுந்த உட் கூரைகளும் மற்ற இடிபாடுகளும் தெரிகின்றன.
மீட்புப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.