வடமேற்கு லண்டனில் உள்ள ஹாரோ பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி போதனா சிவானந்தன், குரோஷியா நாட்டில் நடந்த ஐரோப்பிய ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறந்த பெண் செஸ் வீராங்கனையாக தெரிவாகியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று நாட்களில் தான் சிறுமி போதனா சிவானந்தன், செஸ் விளையாடத் தொடங்கியுள்ளார்.
ஆனால், 8 வயதிலேயே ஐரோப்பாவின் சிறந்த பெண் செஸ் வீராங்கனையாக மாறியுள்ளார்.
இதனையடுத்து, சிறுமி போதனா சிவானந்தன், இங்கிலாந்து பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு அழைக்கப்பட்டு, பாராட்டப்பட்டார்.
அத்துடன், பிரதமர் ரிஷி சுனக்குடன் செஸ் விளையாடுவதும் புகைப்படங்களாக வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.