புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா விஜயகாந்த் இடத்தை நிரப்பவது கடினம்; பிரதமர் மோடி இரங்கல்

விஜயகாந்த் இடத்தை நிரப்பவது கடினம்; பிரதமர் மோடி இரங்கல்

1 minutes read

பிரதமர் மோடி இரங்கல் : விஜயகாந்த் இறப்புக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தனது இரங்கல் செய்தி குறிப்பில், “திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது நடிப்பு மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தது. ஓர் அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய அவர், பொது சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

“அவரது மறைவு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது, அதை நிரப்ப கடினமாக இருக்கும். அவர் நெருங்கிய நண்பராக இருந்தார், பல ஆண்டுகளாக அவருடனான எனது தொடர்புகளை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மீது உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

modi

தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார்.

கடந்த மாதம் 18ஆம் திகதி காய்ச்சல், சளி மற்றும் இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.

முதலில், விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக தரப்பில் கூறப்பட்டது.

தொடர்புடைய செய்தி : கேப்டன் விஜயகாந்த் காலமானார்

பின்னர், அதிக சளி இருப்பதன் காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். மேலும் சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை சார்பில் அவ்வப்போது மருத்துவமனை தரப்பில் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன.

இதனைத்தொடர்ந்து, விஜயகாந்த் கடந்த 12ஆம் திகதி வீடு திரும்பினார்.

இந்த நிலையில், இன்று (28) காலை விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுவதாக தேமுதிக தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More