ஐஸ்லாந்து நாட்டில் பல்வேறு எரிமலைகள் உள்ள நிலையில், அந்நாட்டின் தெற்கு தீபகற்பம் கிராண்டாவிக் பகுதியில் உள்ள எரிமலை திடீரென வெடித்து சிதறியது.
இதன் காரணமாக எரிமலையில் இருந்து லாவா குழம்பு வெளியேறியது. அது அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆனால், லாவா குழம்பு குடியிருப்புப் பகுதிக்குள் சென்றதால் அங்கிருந்த வீடுகள் மற்றும் கடைகள் உட்பட கட்டிடங்கள் அனைத்தும் தீக்கிரையாகின.