கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு சுமார் 12,000 பேரை ஆட்குறைப்புச் செய்தது. அதாவது அதன் ஊழியர்களில் 6 சதவீதம் வரை பணி நீக்கம் செய்தது.
இந்நிலையில், மீண்டு கூகுள் அதன் விளம்பரக் குழுவிலிருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்களை நீக்குகிறது.
பெரும் நிறுவனங்களுக்குச் சேவையாற்றும் விளம்பரக் குழுக்களையே கூகுள் சுருக்க எண்ணுகிறது. அத்துடன், கூகுள் நிறுவனம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குச் சேவையாற்றும் குழுக்களை விரிவுபடுத்தவிருப்பதாக தெரிவித்துள்ளது.
கூகுள் அதன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப (AI) கருவிகளை அதிகரிக்கும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனங்கள் தாங்களே மேம்பட்ட முறையில் வாடிக்கையாளர்களை எட்ட அந்தக் கருவிகள் உதவும்.
AI தொழில்நுட்பம் விளம்பரத் துறையை அதிகம் பாதிக்கும் என்று எண்ணப்படுகிறது.