கொழும்பில் போக்குவரத்துக் குற்றங்களைச் சமாளிப்பதற்கான புதிய நடவடிக்கைகளை இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்தப் புதிய நடவடிக்கைகள், எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரவுள்ளது.
இதன்படி, கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிப்பதற்காக பொலிஸார் CCTV கமெராக்களை பயன்படுத்தவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
அத்துடன், CCTV கமெராக்கள் மூலம் குற்றவாளிகளை இனங்கண்டு, அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அபராதத் தாள்கள் வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்படும் என்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தென்னகோன் மேலும் தெரிவித்தார்.