லண்டனில் “தமிழ் மரபுரிமை திங்கள்” என ஜனவரி மாதம் முழுவதும் தைப்பொங்கல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதன் ஓர் அங்கமாக பிரதமர் ரிஷி சுனக்கின் வாசஸ்தலம் அமைந்துள்ள லண்டன், 10 Downing Street இல் தைப்பொங்கல் விழா, நேற்று (18) வெகு சிறப்பாக நடைபெற்றது.
இங்கிலாந்தின் சுகாதாரம் மற்றும் சமூக பராமரிப்புக்கான அமைச்சர் விக்டோரியா அட்கின்ஸ் மற்றும் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.
கோலம், கரும்பு, மண் பொங்கல் பானை மற்றும் தமிழர் பாரம்பரிய உணவுகள் என தமிழர் பாரம்பரிய முறையில் இந்தப் பொங்கல் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
திருவள்ளுவர் ஆண்டு
தை 1 தமிழாண்டின் முதல் நாளானபடியால், அதுவே தமிழர்களின் தமிழ்ப் புத்தாண்டு ஆண்டாக கருதப்படுகிறது.
அன்றைய தினத்திலேயே சூரியன் மகர ராசியில் நகர்கிறது என்றும் ஒரு மகரராசிப் பிரவேசத்திற்கும் அடுத்த மகர ராசிப் பிரவேசத்திற்கும் உள்ள இடைப்பட்ட காலமே ஒரு திருவள்ளுவர் ஆண்டு என்றும் கூறப்பட்டது.
அன்றைய நாள் பொங்கலிட்டு, சூரியனுக்கு நன்றி செலுத்துவது வழமையாதலால், அந்நாளை புதுநாள் எனவும் கூறுவர்.
தமிழ் மரபுரிமைக்கு அங்கிகாரம் கோரல்
இந்நிலையில், ஜனவரி மாதத்தை தமிழ் மரபுரிமை மாதமாக இங்கிலாந்து அரசு அங்கிகரிக்க வேண்டும் என்ற நடவடிக்கைகளை அங்கு வாழும் தமிழர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாகவே இவ்வாண்டு ஜனவரி மாதம் முழுவதும் இங்கிலாந்தில் ஆங்காங்கே “தமிழ் மரபுரிமை திங்கள்” பொங்கல் விழாக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
பிரதமரின் பொங்கல் வாழ்த்து 2024