மலேசியாவின் 17ஆவது மாமன்னராக ஜொகூரின் சுல்தான் இப்ராஹிம் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
65 வயதான சுல்தான் இப்ராஹிம், மலேசியாவின் மாமன்னராகப் பதவி ஏற்பது இதுவே முதன்முறை ஆகும்.
அவரது தந்தை, மலேசியாவின் மாமன்னராக 34 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.
ஜொகூரில் இருந்து புறப்பட்டு, அவர் நேற்று கோலாலம்பூருக்குச் சென்றார்.
ஜொகூரில் அவரை வழியனுப்பவும், கோலாலம்பூரில் அவரை வரவேற்கவும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர்.
அவர் மாமன்னராகப் பொறுப்பேற்றிருப்பது சாதகமான அம்சங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளியல், அரச தந்திரம் மற்றும் தேச ஒற்றுமை ஆகியவை மேம்பட அவர் துணைபுரிவார் என்று நம்பப்படுகிறது.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விருந்தினர்கள் முன்னிலையில், சுல்தான் இப்ராஹிம் மாமன்னராகப் பதவியேற்கும் கடிதத்தில் நேற்று (30) கையெழுத்திட்டார்.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் மாமன்னராகப் பதவி வகிக்கவுள்ளார்.