இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கிளாடியா டென்னி பரிந்துரைத்துள்ளார்.
அது, டிரம்ப் ஜனாதிபதி பதவியில் இருந்தபோது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட வடிவமைக்கப்பட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது.
டிரம்பின் கொள்கைகளின் தொகுப்பு ஆபிரகாமிக் உடன்படிக்கை என்று அழைக்கப்படுகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்ட ஆபிரகாம் உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார்.