உலக புற்றுநோய் தினம், ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
அந்தவகையில், நேற்றைய உலக புற்றுநோய் தினத்தையொட்டி, உலக சுதாதார ஸ்தாபனம் (World Health Organization) புதிய தகவல்களை மக்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளது.
புற்றுநோய் என்பது ஒரு புதிய நோய் அல்ல. அது காலங்காலமாக இருந்து வருகிறது. ஆரம்ப மனிதனின் எலும்புக்கூடுகளைச் சோதித்த போது, அப்போதே புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது.
புற்றுநோய் என்பது மனிதநோய் அல்ல. அது எல்லா உயிரினத்திலும் உண்டு.
புற்றுநோய் குறித்து உலகச் சுகாதார ஸ்தாபனம் வெளியிட்ட அறிக்கையில் இருந்து,
புற்றுநோய் குறித்த சில புதிய தகவல்கள்
🎗️100 வகையான புற்றுநோய்கள் உள்ளன.
🎗️நுரையீரல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஆகியவை பொதுவாக ஏற்படும் புற்றுநோய்கள் ஆகும்.
🎗️நுரையீரல் புற்றுநோயால்தான் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.
🎗️ஐந்தில் ஒருவருக்கு அவரின் ஆயுட்காலத்தில் புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் உள்ளது.
🎗️புள்ளி விவரங்களின்படி, 9 ஆண்களில் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழக்கக்கூடும்.
🎗️12 பெண்களில் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழக்கக்கூடும்.
🎗️2022ஆம் ஆண்டில் சுமார் 10 மில்லியன் மக்கள் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ள அதேவேளை, சுமார் 20 மில்லியன் புதிய புற்றுநோயாயளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
🎗️2022ஆம் ஆண்டில் புதிய புற்றுநோய்ச் சம்பவங்களில் பாதி ஆசியாவில் ஏற்பட்டன. உலக மக்கள் தொகையில் பாதி ஆசியாவில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
🎗️அதிகம் பாதிக்கப்படும் இடம் ஐரோப்பா ஆகும். ஆனால், அங்கு உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் தான் உள்ளனர். ஆனால் 25 சதவீத புற்றுநோய்ச் சம்பவங்கள் ஐரோப்பாவில் நிகழ்கின்றன.
🎗️குறைவாகப் பாதிக்கப்படும் இடம் ஆப்பிரிக்கா ஆகும். அங்கு 20 சதவீத மக்கள் வசிக்கின்றனர். ஆனால், 6 சதவீத புற்றுநோய்ச் சம்பவங்களே அங்கே நிகழ்கின்றன.
🎗️2040ஆம் ஆண்டுக்குள் புதிய புற்றுநோய்ச் சம்பவங்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
🎗️புற்றுநோய் ஏற்பட ஆரோக்கியம் அற்ற உணவுப் பழக்கவழக்கம், மது அருந்துதல் மற்றும் புகைப்படித்தல் போன்றவை முக்கியக் காரணங்களாக உள்ளன.