இந்தியாவில் சிறு நகரங்களில் வாழும் 2 மில்லியன் பேருக்கு AI செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் திறன் வாய்ப்புகளை வழங்க Microsoft திட்டமிடுகிறது.
2025ஆம் ஆண்டுக்குள் அந்த இலக்கு எட்டப்படும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெள்ளா (Satya Nadella) தெரிவித்தார்.
சமூகப் பொருளியல் முன்னேற்றத்துக்கு அந்தப் பயிற்சிகள் உதவும். இந்தியா – அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான AI ஒத்துழைப்புக்கும் அந்தத் திறன் பயிற்சிகள் அவசியமாவதாக அவர் கூறினார்.
உலகம் முழுதும் பொருளியல் வளர்ச்சி சீராய் இருப்பதை உறுதிசெய்ய AI செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உதவும் என்றும் அவர் நம்புகிறார்.