பிரான்ஸ், தலைநகர் பாரிஸ் சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற நகரமாகும்.
ஆனால், அந் நகரம் தற்போது முயல்களின் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளது.
நெப்போலியனின் கல்லறையைச் சுற்றி இருக்கும் பூங்காவையும் சாக்கடையையும் காட்டு முயல்கள் சேதம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், முயல்களை பிடித்து வேறு இடத்திற்கு மாற்ற முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
கடந்த ஜனவரி மாதம் இறுதியில் முயல்களைப் பிடிக்கும் பணியைத் தொடங்கியது நகரக் காவல்துறை.
பிடிக்கப்படும் முயல்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு, அவை வேறு இடத்தில் விடுவிக்கப்படுவதாக நகரக் காவல்துறை தெரிவித்தது.
இதற்கு விலங்கு உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பிடிக்கப்படும்போதும் வேறு இடத்திற்கு மாற்றப்படும்போதும் முயல்கள் இறந்துபோகக்கூடும் என்று விலங்கு உரிமை அமைப்புகள் எச்சரித்தன.
ஆனால், முயல்கள் வேட்டையாடப்படுவதில்லை என்று பாரிஸ் நகரக் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.