ஈரானில் ஏ.கே. 47 ரக துப்பாக்கி மூலம் தனது தந்தை உள்ளிட்ட 12 உறவினகளை 30 வயதுடைய இளைஞன் சுட்டுக்கொலை செய்துள்ளார்.
ஈரானிள் மத்திய மாகாணம் கெர்மன் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் குடும்ப பிரச்சனையின் உச்சக்கட்டமாக இந்த துபாக்கிச்சூடு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த நபரை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கியல் சுட்டு கொலை செய்துள்ளனர்.
ஈரானில் வேட்டையாடுவதற்கு மட்டும் மக்களுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கப்படுகிறது.
அத்துடன், இவ்வாறான மிகப்பெரிய அளவிலான துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்வது அங்கு மிகவும் அரிதானது என்று கூறப்படுகின்றது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சம்பவம் ஒன்றில், அரசு நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு மூன்று பேரை கொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.