இந்தோனேசியாவின் சுமெனெப் பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
புதன்கிழமை இரவு 10.46 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறி உள்ளது.
சுமெனெப் பகுதியிலிருந்து தெற்கே 88 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
அத்துடன், பூமிக்கு அடியில் 598.7 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறி உள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விரிவான தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை