இங்கிலாந்தின் சில பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் கனமழை, வெள்ளம் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் வானிலை “மிகவும் சீரற்றதாக” இருக்கும் என வானிலை அலுவலக வானிலை ஆய்வாளர் கிரெக் டியூஹர்ஸ்ட் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தென்மேற்குப் பகுதிகளில் மழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சில இடங்களில் 40 மிமீ வரை மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சில பகுதிகளில் சிறியளவில் வெள்ளம் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/metoffice/status/1761355739526840427