அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசா போருக்கு எதிரான வெளிப்படையான எதிர்ப்பை வெளியிடும் வகையில் இந்த சம்பவம், ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தீ அணைக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் அமெரிக்க அதிகாரிகளால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அந்த நபர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்று பெருநகர காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தெரிவித்தார்.