ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் உயிர்பிழைக்கும் விகிதம் இங்கிலாந்தில் குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நோர்வே ஆகிய நாடுகளோடு ஒப்பிடுகையில், இங்கிலாந்தில் புற்றுநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் விதம் மாறுபட்டிருக்கிறது.
University College London, International Cancer Benchmarking Partnership ஆகியவற்றின் ஆய்வாளர்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நோர்வே ஆகியவற்றைச் சேர்ந்த 780,000 புற்றுநோயாளிகளின் தகவல்களை ஆராய்ந்தனர்.
அந்த 4 நாடுகளின் புற்றுநோயாளிகளைப் பற்றிய ஆய்வின் முடிவுகள் அதனைப் புலப்படுத்தின.
இங்கிலாந்தில் புற்றுநோய்ச் சிகிச்சைக்கான தேவை அதிகரித்துள்ளது. மக்கள்தொகையும் மூப்படைகிறது.
இவற்றால் நிலைமை மேலும் மோசமடையலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2012ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பதிவான தகவல்கள் ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவின.
இங்கிலாந்தை தவிர்த்த மற்ற 3 நாடுகளில் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சைகள் தொடங்கப்படுவதாக தெரியவந்துள்ளது.