பொது இடங்களை அசுத்தம் செய்வோரை அடையாளம் காண சிங்கப்பூர் அதிரடி நடவடிக்கை எடுக்கவுள்ளது.
அதாவது, பொது இடங்களில் குப்பை போடுவோரின் புகைப்படங்களை வெளியிட சிங்கப்பூர் தயாராகி வருகிறது.
இதற்காக குப்பை போடுவோரை அடையாளம் காண மும்மடங்கு அதிகமாக அதாவது ஏறக்குறைய 1,000 கண்காணிப்புக் கமெராக்களைப் பொருத்துவதற்குத் திட்டமிடப்படுகிறது.
அதேவேளை, சிறு பிள்ளைகள், வயோதிபர் மற்றும் பலவீனமானவர்கள் உள்ளிட்ட பிரிவினர் இதில் சம்பந்தப்பட்டிருந்தால் கவனமான அணுகுமுறை பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களை அசுத்தம் செய்வோரை அடையாளம் காண அந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், குப்பை போடுவோருக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது நீதிமன்றத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்படலாம்.
மீண்டும் மீண்டும் குப்பை போடுவோர் பொது இடங்களைக் குறைந்தது மூன்று மணி நேரத்திற்குச் சுத்தப்படுத்தும்படி உத்தரவிடப்படலாம்.
பொது இடங்களை அசுத்தம் செய்வது சிங்கப்பூரில் பாரிய குற்றச்செயலாக கருதப்படுகிறது.