மெட்டா நிறுவனத்தின் சமூக வலைதள பக்கங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள், நேற்றிரவு (05) சுமார் 40 நிமிடங்கள் முடங்கின.
இதனால் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பயனர்கள் அவதியடைந்தனர்.
பேஸ்புக் கணக்குகள் அனைத்தும் தானாகவே லொக்அவுட் (log out) ஆகின.
எனினும், சுமார் 40 நிமிடங்களின் பின்னர் மெட்டா நிறுவனத்தின் சார்பில் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு நிலைமை வழமைக்குக் கொண்டுவரப்பட்டது.
https://x.com/elonmusk/status/1765047740327702665?s=20
இதற்கிடையில், ஃபேஸ்புக், இன்ஸ்டா முடக்கத்திற்கு எக்ஸ் நிறுவன அதிபர் எலான் மஸ்க் கிண்டல் செய்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகின்றது.