அமெரிக்காவில் பைடன் – டிரம்ப் ஆகியோரின் தலையெழுத்தை தீர்மானிக்கும் Super Tuesday முடிவுகள் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் ‘Super Tuesday’ எனப்படும் நேற்றைய (05) நாளில் ஆரம்பமான 15 மாநிலங்களைச் சேர்ந்த மில்லியன்கணக்கான மக்கள் தங்களது விருப்பமான வேட்பாளரைத் தெரிவுசெய்யவிருக்கின்றனர்.
இதுவொரு முன்னோடித் தேர்தல் ஆகும்.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் அதிபர் ஜோ பைடன் என்பதும், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் முன்னைய அதிபர் டோனல்ட் டிரம்ப் என்பதும் கிட்டத்தட்ட முடிவாகி வருகிறது.
இதேவேளை, டோனல்ட் டிரம்ப் Super Tuesday களத்தில், 15 மாநிலங்களையும் கைப்பற்றிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவரை எதிர்த்து நிற்கும் திருமதி நிக்கி ஹேலி (Nikki Haley) Vermont மாநிலத்தில் வென்றுள்மை குறிப்பிடத்தக்கது.