பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக மீண்டும் அஸிப் அலி ஸர்தாரி (Asif Ali Zardari) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, பாகிஸ்தானின் 14அவது ஜனாதிபதியாக அவர் பொறுப்புக்கு வருகிறார்.
நாடாளுமன்றத்தில் அவருக்கு 411 வாக்குகள் கிடைத்தன.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவுபெற்ற வேட்பாளர் மஹ்மூட் கான் (Mahmood Khan ) 181 வாக்குகளையே பெற்றார்.
நாட்டை முன்னெடுத்துச் செல்ல அனைத்து அரசியல்கட்சிகளும் ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டும் என்று ஸர்தாரி கேட்டுக்கொண்டார்.
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோவின் கணவரான அவர், ஜனாதிபதியாவது இது இரண்டாவது முறை ஆகும்.
11 ஆண்டுக்குப் பிறகு அவர் மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்கிறார்.
மக்களில் ஒருவர் இரண்டாவது முறை அதிபராகப் பொறுப்பேற்பது பாகிஸ்தான் வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும்.