தென்னாப்பிரிக்காவில் பஸ் ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
லிம்போபோ மாகாணத்தில் உள்ள மாமட்லகலா அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இறந்தவர்களில் பலர் மதக் கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த யாத்ரீகர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் உள்ள தடுப்புகளில் மோதியதால், பேருந்து பாலத்தின் மேல் சென்று தரையில் மோதி தீப்பிடித்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.