அமெரிக்காவின் பால்ட்டிமோர் பாலம் உடைந்த சம்பவத்தை அடுத்து 60 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான அவசர உதவித் திட்டத்துக்கான கோரிக்கையை, அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
பாலத்தை மோதிய கப்பல் இன்னமும் அங்கிருப்பதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
இதனால் பால்ட்டிமோர் துறைமுகத்தின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.
அந்தப் பகுதியில் இடிபாடுகளை அகற்றும் பணிகளை அமெரிக்கக் கடற்படை வழிநடத்துகிறது.
சேதமடைந்த கொள்கலன்களில் இருந்து கசிவு ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற கவலை நிலவியது.
இதுவரை நடந்த சோதனைகளில் அபாயகரமான பொருள்களில் இருந்து கசிவு ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுற்றுப்புறத்துக்கு உடனடி மிரட்டல் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கை, கொழும்பு துறைமுகத்திற்கு வர இருந்த கப்பல் ஒன்று மோதியதையடுத்தே மேற்படி பாலம் உடைந்தது.
இந்தச் சம்பவத்தில் பாலத்தில் பயணித்த வாகனங்கள் விபத்துக்குள்ளாகி, 6 பேர் மரணித்தனர்.