இங்கிலாந்து முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், இன்று ஏப்ரல் 1ஆம் திகதி சம்பள உயர்வை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் ஒவ்வொரு வருடமும் தேசிய வாழ்க்கை ஊதியம் மற்றும் தேசிய குறைந்தபட்ச ஊதியம் ஆகிய இரண்டும் குறைந்த ஊதியக் குழுவின் ஆலோசனையின் பேரில் தீர்மானிக்கப்படுகின்றது.
அதன்படி, 21 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள் தேசிய வாழ்க்கை ஊதியத்துக்கு தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஊதிய உயர்வுக்க தகுதி பெற 23 வயதாக இருக்க வேண்டும்.
இந்த நிலையில், ஒரு மணி நேரத்துக்கு £10.42ல்ஆக இருந்த ஊதியம் தற்போது £11.44ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, 16 அல்லது 17 வயதுடைய இளைய ஊழியர்களுக்கு தேசிய குறைந்தபட்ச ஊதியம், ஒரு மணி நேரத்துக்கு £5.28 இலிருந்து £6.40ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 18, 19 மற்றும் 20 வயது ஊழியர்களுக்கு தேசிய குறைந்தபட்ச ஊதியம் £7.49இலிருந்து £8.60ஆக உயர்வடைந்துள்ளது.
குறைந்தபட்ச ஊதியத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய உயர்வு இது என்று இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.