இம்மாதம் (ஏப்ரல்) 8ஆம் திகதி முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது.
இந்த முழு சூரிய கிரகணத்தை வட அமெரிக்காவில் மட்டுமே சிறப்பாக பார்க்க முடியும் என நாசா தெரிவித்துள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதனால் சூரியனின் ஒரு பகுதி அல்லது முழுவதுமாக மூடப்பட்டிருக்கும்.
முழு சூரிய கிரகணம் மிக மிக அரிதானது.
நாசாவின் கூற்றுப்படி, வட அமெரிக்கர்கள் அடுத்த முறை இது போன்ற முழு சூரிய கிரகணத்தை 2044ஆம் ஆண்டே மீண்டும் பார்க்கலாம்.