ஒரே பாலினத் திருமண மசோதாவை, தாய்லாந்து நாடாளுமன்றம் கடந்த வாரம் ஏற்றுக்கொண்டது. தாய்லந்தின் முக்கிய அரசியல் கட்சிகள் அதற்கு ஆதரவளித்தன.
இந்நிலையில், ஒரே பாலினத் திருமண மசோதாவை, தாய்லாந்தின் செனட் சபையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதன்மூலம், வெகுவிரைவில் ஒரே பாலினத் திருமணத்தை அனுமதிக்கும் முதல் தென்கிழக்காசிய நாடாக தாய்லாந்து மாறவுள்ளது.
மசோதாவை மற்றொரு தணிக்கைக் குழு 60 நாள்களுக்குப் பரிசீலிக்கும்.
அது சட்டமாக மாறுவதற்குத் தாய்லந்து மன்னரின் அதிகாரபூர்வ ஒப்புதல் தேவை.
மசோதாவில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அத்துடன், ‘ஆண்கள்’, ‘பெண்கள்’, ‘கணவர்கள்’ மற்றும் ‘மனைவிகள்’ என திருமணச் சட்டத்தில் உள்ள இந்த வார்த்தைகளுக்குப் பதிலாகப் பாலின நடுநிலையைக் குறிக்கும் வார்த்தைகள் பயன்படுத்தப்படும்.
ஒரே பாலினத் திருமண மசோதாவிற்கு தாய்லாந்து மக்கள் பெரும் ஆதரவு கொடுப்பது கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.