தாய்லாந்தைச் சேர்ந்த கப்பல் ஒன்று, சூரத் தானி (Surat Thani) எனும் கடலோர மாநிலத்திலிருந்து கோ தாவோ (Koh Tao) எனும் இடத்தை அடையவிருந்த நேரத்தில் தீப்பிடித்தது.
இதன்போது கப்பலில் சென்றுகொண்டிருந்த பயணிகள், தீக்கு அஞ்சிக் கடலில் குதித்து உயிர் தப்பியுள்ளனர்.
கடற்கரைக்குச் சற்று தூரத்தில் சென்றுகொண்டிருந்தபோது கப்பலில் திடீரென்று தீப்பற்றியது.
முதலில் கரகரவென்று சத்தம் கேட்டதாகவும் பின்னர் புகை வாடை வீசியதாகவும் பின்னர் எச்சரிக்கை ஒலி எழுந்தததாகவும் முதற்கட்ட விசாரணையில் பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தாய்லாந்தையும் வெளிநாடுகளையும் சேர்ந்த சுமார் 100க்கும் அதிகமானோர் சம்பவத்தின் போது கப்பலில் இருந்துள்ளனர்.
குறித்த கப்பல் ஊழியர்கள் அருகிலுள்ள தீவின் அதிகாரிகளுக்கு உடனடியாக விவரம் தெரிவித்தமையால், அதிகாரிகள் உடனடியாக மீட்புப் படகுகளை அனுப்பினர்.
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.