தென்கொரியாவில் இன்று (10) பொதுத் தேர்தல் நடைபெறும் நிலையில், சுமார் 44 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.
நாட்டின் அரசியல் போக்கைத் தீர்மானிக்கக்கூடிய முக்கியமான தேர்தல் இதுவாகும்இ
ஜனாதிபதி Yoon Suk Yeol-வின் மிகுதி மூன்று வருடங்கள் பதவிக்காலத்தின் போக்கையும் இந்த தேர்தல் முடிவு தீர்மானிக்கலாம் என அவதானிகள் கூறுகின்றனர்.
கடந்த சில மாதங்களாக ஜனாதிபதிக்கு மக்களிடையே செல்வாக்கு வெகுவாகக் குறைந்திருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அவருடைய கட்சியான நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறத் தவறினால் அவருக்கான ஆதரவு மேலும் குறைவடையலாம்.
இந்த தேர்தலில், ஆளும் மக்கள் சக்திக் கட்சிக்கும் எதிர்த்தரப்பு ஜனநாயகக் கட்சிக்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.