இங்கிலாந்து பிராட்போர்ட் நகர மையத்தில் தனது குழந்தையை தள்ளுவண்டியில் தள்ளும் போது கத்தியால் குத்தி கொல்லப்பட்ட தாயின் புகைப்படம் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று பிராட்போர்டில் தாக்கப்பட்ட குல்சுமா அக்டர் (27), அவரது கொலைக் குற்றம் சாட்டப்பட்ட 25 வயது கணவர் ஹபிபுர் மாசும் உடன் புடவையில் எடுத்துக்கொண்ட படமே வெளியாகியுள்ளது.
செவ்வாய்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்ட 25 வயதான மாசும், வியாழன் அன்று பிராட்ஃபோர்ட் மாவட்ட நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்கு ஆஜரானார்.
பர்ன்லியின் லீமிங்டன் அவென்யூவைச் சேர்ந்த மாசும், ஆறு நிமிட விசாரணையைத் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டார்.
27 வயதான அக்டர், கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.
இந்த தாக்குதலில் அவரது மகனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அக்டரின் உறவினர் அஃப்தாப் மியா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அக்டர் பங்களாதேஷில் இருந்து இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்த தனது கணவர் மசூமுடன் இங்கிலாந்துக்கு வந்ததாக தெரிவித்தார்
இதேவேளை, குற்றவாளிக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட 23 வயது நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.