பப்புவா நியூ கினியாவின் வடக்கு பகுதியில் இன்று காலை 6.56 மணியளவில் 6.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
நியூ பிரிட்டன் தீவின் கிம்பே பகுதியில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவில், 64 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
எனினும், இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையமும் தெரிவித்து உள்ளது.
கடந்த மாதம் பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் 5 பேர் வரை உயிரிழந்தனர்.