இந்தியா – தென்னிந்திய மாநிலமான கேரளாவில் அதிக வெயில் காரணமாக இருவர் மரணித்துள்ளனர்.
அவர்கள் வெப்பத் தாக்கத்தால் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. அவர்களின் உடல்கள் பரிசோதிக்கப்படுகின்றன.
மரணித்தவர்களில் ஒருவர் 90 வயதுப் பெண்; மற்றொருவர் 53 வயது ஆண் என்று Reuters செய்தி வெளியிட்டுள்ளது.
கேரளாவில் வெப்பநிலை 41.9 டிகிரி செல்ஸியஸை எட்டியுள்ளது. வழக்கத்தைக் காட்டிலும் அது 5.5 டிகிரி செல்ஸியஸ் அதிகமாகும்.
இதையடுத்து வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேரள மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டிலும் கடுமையான வெயில் நிலவுகின்றது. சென்னையில் வெயிலைச் சமாளிக்க அரசியல்வாதி ஒருவர் மக்களுக்கு பழங்கள், இளநீர் மற்றும் குளிர்பானங்களை வழங்கி வருகின்றார்.
ஏப்ரலுக்கும் ஜூன் மாதத்துக்கும் இடையே வழக்கமாகப் பருவமழை பெய்து வெப்பம் தணியும். ஆனால், இம்முறை அதிக நாள்களுக்கு வெப்பம் நீடிக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வுத்துறை கணித்துள்ளது.