டைட்டானிக் (Titanic) கப்பல், 1912ஆம் ஆண்டு மூழ்கியது. 2,200 க்கும் அதிகமானோர் அந்தக் கப்பலில் பயணம் செய்த நிலையில், சுமார் 700 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பணக்காரர் கிளைவ் பாமர் (Clive Palmer).
இவர், டைட்டானிக் போன்று இன்மொரு கப்பலை உருவாக்க நீண்ட காலமான முயற்சி செய்து வருகிறார்.
அதன்படி, 2012 இல் Titanic II கப்பலை அறிமுகம் செய்ய கிளைவ் பாமர் திட்டமிட்டிருந்தார். அது சாத்தியமாகவில்லை. கொவிட்-19 தொற்று பரவலால் அந்தத் திட்டம் 2019 இலும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இப்போது சொகுசுக் கப்பல்களின் ஆரம்ப செயல்பாடுகள் வழக்க நிலைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, Titanic II கப்பலை அறிமுகம் செய்யும் முயற்சியில் பாமர் மீண்டும் இறங்கியுள்ளார்.
அடுத்த ஆண்டின் முதலாம் காலாண்டில் அதற்கான வேலை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான பரிந்துரைகளும் திட்டங்களும் தற்போது ஆராயப்படுகின்றன.