5
சீனா – குவாங்டோங் மாநிலத்தில் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த அனர்த்தம், Meizhou நகரையும் டாபு வட்டாரத்தையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் நேற்று (01) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது, அந்த வழியாக வந்த 18 கார்கள் அதில் சிக்கிக் கொண்டன. சம்பவத்தில் சுமார் 50 பேர் பாதிக்கப்பட்டனர்.
இதில் 30 பேர் மீட்கப்பட்டு, வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.