அப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் விற்பனை ஐரோப்பாவைத் தவிற மற்ற எல்லாச் சந்தைகளிலும் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் ஐ-போன் தேவை சுமார் 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
நிறுவனத்தின் வருவாயும் 4 சதவீதம் சரிந்து 90.8 பில்லியன் டொலராக பதிவானதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் அப்பிள் நிறுவனத்தின் பங்கு விலைகள் பாதிக்கப்படவில்லை என்றும் பங்கு விலைகள் தொடர்ந்து ஏற்றம் கண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது புதிய கருவிகள் வெளியிடுவதிலும், செயற்கை நுண்ணறிவிலும் முதலீடு செய்யும் அப்பிள் நிறுவனம், வரும் மாதங்களில் விற்பனை சூடுபிடிக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.