பிரேசில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர் எண்ணிக்கை 78ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், 100க்கும் அதிகமானோர் காணாமல் போனதுடன், 115,000க்கும் அதிகமான மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்டுள்ள தென் மாநிலத்தின் ஆளுநர், மரண எண்ணிக்கை வெகுவாக உயரக்கூடும் என்று அச்சம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், மண்சரிவுகளும், தண்ணீரில் மூழ்கிய நிலப்பகுதிகளும் மீட்பு-நடவடிக்கைக்குப் பெரும் தடையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
Porto Alegre முற்றாக வெள்ளத்தில் சிக்கியுள்ளதுடன், வீதிகளில் நீர் நிரம்பி உள்ளதுடன், வீடுகளின் கூரைகள்கூடத் தெரியாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு காணப்படுகின்றது.
அத்துடன், மக்களில் 70 சதவீதமானவர்களுக்கு குடிநீர் இல்லை என்பதுடன், வீடுகளுக்குள் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்க ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களும் மீட்புப் படையினரும் போராடி வருகின்றனர்.