செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைக்க பா.ஜ.க தயார்!

கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைக்க பா.ஜ.க தயார்!

0 minutes read

இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைக்கச் சம்மதித்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் கட்சியின் பிரதிநிதிகள் உட்பட 21 தலைவர்கள் கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்திய நாடாளுமன்றத்துக்கான மொத்த இடங்கள் 543ஆகும். அதன்படி ஆட்சி அமைக்க 272 உறுப்பினர்கள் தேவை. எனினும், இந்தியத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சிக்கு 99 இடங்கள் கிடைத்தன.

எனவே, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களோடு அரசாங்கம் அமைக்கவிருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More