இந்தியாவின் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி பதவியேற்கும் வைபவம் எதிர்வரும் சனிக்கிழமை (8 ஜூன்) இடம்பெறக்கூடும் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதே நாள், புதிய அமைச்சரவையும் பதவியேற்றுக்கொள்ளும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, தொடர்ந்து மூன்றாம் தவணைக்காலத்துக்குப் பிரதமராக ஒருவர் பதவியேற்கவிருப்பது இதுவே முதல் முறையாக இருக்கும்.
முன்னதாக, மோடி தமது பதவி விலகல் கடிதத்தையும் தமது அமைச்சரவையின் பதவி விலகல் கடிதங்களையும் ஜனாதிபதி முர்முவிடம் சமர்ப்பித்தார்.
புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை அவரை இடைக்காலப் பிரதமராகத் தொடருமாறு, ஜனாதிபதி முர்மு இதன்போது கேட்டுக்கொண்டார்.