மத்திய இந்தோனேஷியாவில் உள்ள கலேம்பங் கிராமத்தில் 45 வயதான பெண், கடந்த 3 நாட்களாக காணாமல் போன நிலையில், அவரது கணவரும், கிராம மக்களும் தேடி வந்துள்ளனர்.
அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் பெண்ணின் உடைமைகளை கிராமத்தினர் கண்டுள்ளனர்.
அத்துடன், 16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று பெரிய வயிற்றுடன் இருப்பதை கண்டுள்ளனர்.
இதையடுத்து, அந்த மலைப்பாம்பின் வயிற்றை கிழித்து பார்த்த போது அதனுள் அந்த பெண் இறந்த நிலையில் இருந்துள்ளார்.
மலைப்பாம்பை முழுமையாகக் கிழித்து அதன் வயிற்றில் இருந்து பெண்ணின் உடலை அவர் அணிந்திருந்த உடையுடன் வெளியே எடுத்ததாக கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேஷியாவில் கடந்த சில ஆண்டுகளில் மலைப்பாம்பு முழுங்கி பலர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.