சீன மக்களிடையே சைக்கிள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக The Hindu செய்தி வெளியிட்டுள்ளது. சீனத் தலைநகர் பெய்ச்சிங்கில் தற்போது கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வண்ண வண்ண சைக்கிள்கள் காணப்படுவதாகவும் The Hindu குறிப்பிட்டுள்ளது.
வெவ்வேறு 3 சேவை நிறுவனங்கள் அந்த சைக்கிள் பகிர்வுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. அலைபேசியில் உள்ள செயலியில் QR குறியீட்டைப் பயன்படுத்தி சைக்கிளை ஓட்டிச்செல்லலாம். அதற்கு ஏற்றாற்போல் அங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
உதாரணத்துக்கு ரயில் நிலையம் ஒன்றிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பூங்காவுக்குச் செல்லும் வழியில் 5 சைக்கிள் நிறுத்துமிட வசதிகள் உள்ளன. வீதிகளிலல் சைக்கிளோட்டுவதற்கான தடங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. நேரத்துக்கு ஏற்ற கட்டணத்தைச் செலுத்தவேண்டும்.
எப்போதுமே பரபரப்பாக இருக்கும் பெய்ச்சிங்கில் பயணம் மேற்கொள்ள இப்போதைக்கு சைக்கிள் சிறந்த தெரிவாக இருப்பதாகப் பலர் கருதுகின்றனர்.
அத்தோடு, சீனாவின் பெய்ச்சிங் தவிர்த்து ஃபுஜியான், அந்த மாநிலத்திலுள்ள சியாமன் என்ற நகரம் மற்றும் ஹைனான் ஆகிய பகுதிகளிலும் சைக்கிள் பயணம் தற்போது பிரபலமடையத் தொடங்கியுள்ளது.