செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா மாணவர் எதிர்த்து நடக்கும் போக்கை உருவாக்குவதாக புத்தகத்திற்கு தடை

மாணவர் எதிர்த்து நடக்கும் போக்கை உருவாக்குவதாக புத்தகத்திற்கு தடை

1 minutes read

மாணவர் எதிர்த்து நடக்கும் போக்கை உருவாக்குவதாக பாடசாலைகளில் அதிபர்கள் கருதியமையால், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் “Ban This Book” என்ற புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அலென் கரெட்ஸ் எழுதிய அந்தச் சிறார் புத்தகம், Indian River county எனும் பகுதியில் இருக்கும் பாடசாலைகளிலும் அகற்றப்படும் என்று The Guardian செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தப் புத்தகம், 2017ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அப் புத்தகத்தில் சிறுமி ஒருவர் ஒரு புத்தகத்தை இரவல்பெற நூலகத்திற்குச் செல்கிறார். அப்போது நூலக அதிகாரி அந்தப் புத்தகம் நூலகத்திலிருந்து தடை செய்யப்பட்டதாகக் கூறுகிறார். அந்தப் புத்தகம் பிள்ளைகளுக்குப் பொருத்தமாக இருக்காது என்று கருதி பெற்றோர் அந்தப் புத்தகத்தைத் தடை செய்யச் சொன்னதால் அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டிருப்பதாக புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும்.

எனவே, அந்தச் சிறுமி நூலகத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் புத்தகங்களைச் சேகரித்து தம்முடைய சொந்த நூலகத்தை இரகசியமாக உருவாக்குகிறார். அதுவே Ban This Book புத்தகத்தின் கதைச் சுருக்கம்.

இதனையடுத்து, மாணவர் எதிர்த்து நடக்கும் போக்கை உருவாக்குவதாக பாடசாலைகளில் அதிபர்கள் கருதியமையால், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் “Ban This Book” புத்தகம் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More