அமெரிக்கா மற்றும் உக்ரேன் ஆகியன 10 ஆண்டு இருதரப்பு பாதுகாப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியும் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.
இத்தாலியில் நடைபெறும் G7 மாநாட்டில் இந்த உடன்பாடு கைச்சாத்தானது. உளவுத் தகவல்களை மேலும் பகிர்ந்துகொள்ள அது வகை செய்யும்.
அத்துடன், உக்ரேனியப் படைகளுக்குத் தொடர்ந்து பயிற்சியளிக்கவும் உக்ரேனின் தொழில்துறையில் முதலீடு செய்யவும் உடன்பாடு
உதவும்.
ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளில் இருந்து கிடைக்கும் வட்டியைப் பயன்படுத்தி சுமார் 50 பில்லியன் டொலர் கடனை உக்ரேனுக்கு வழங்கவும் குறித்த மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த உடன்பாட்டின் கீழ், இவ்வாண்டு இறுதிக்குள் கீவ்விற்குப்பணம் சென்றுசேரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய 7 நாடுகளும் அதற்கு நிதி வழங்கும்.
இதையும் படிங்க : ஜி7 உச்சி மாநாடு; இத்தாலி விரையும் உலக தலைவர்கள்