பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
லண்டன் – ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை (ஜூன் 10) இரவு 9:27 மணிக்கு புறப்பட்ட 300 பயணிகளுடன் லண்டனில் இருந்து டெக்சாஸ் நோக்கிப் பயணித்த Boeing-ன் 787-9 Dreamliner விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனையடுத்து, சுமார் 9 மணி நேர பயணத்திற்கு பின்னர் புறப்பட்ட இடத்திற்கே விமானம் திரும்பியுள்ளது.
பொதுவாக லண்டனில் இருந்து டெக்சாஸ் செல்ல 10 மணி 15 நிமிடங்கள் ஆகும். ஆனால், குறித்த விமானத்தை பழுதுபார்க்கும் வசதி லண்டனில் உள்ள நிறுவனத்தில் மட்டுமே இருந்தது. அதன் காரணமாக அது லண்டனுக்கே திருப்பி அனுப்பப்பட்டது.
அதன்பின்னர் அதில் பயணித்த 300 பயணிகளும் டெக்சாஸ் செல்லும் மற்றொரு விமானத்திற்கு மாற்றப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தால் குறித்த பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டே பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.